jeevan-works-logo
booked.net
லெபனானில் நடந்த வரலாற்று கொடூரம்!! ஆறு ஆண்டுகள் காத்திருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து !!

Published: Thursday, Aug 06,2020 ,07:48:05am

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்டு, கைப்பற்றப்பட்ட 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து அங்கு உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் கடந்த ஆறு ஆண்டுகளாக  சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த அம்மோனியம் நைட்ரேட் குவியல் நேற்று பெரும் வெடிவிபத்தை அங்கு ஏற்படுத்தியது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே அதிர செய்துள்ளது. பலி எண்ணிக்கை  100க்கும் அதிகமாக இருக்கலாம என்றும்,  4000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

முதல்கட்ட விசாரணையில் அப்பகுதியில் ஒருவர் வெல்டிங் செய்துகொண்டிருந்ததில் ஏற்பட்ட தீப்பொறியே ரசாயனப்பொருட்கள் தீப்பிடிக்கக் காரணம் என தெரியவந்துள்ளது. 

பெய்ரூட்  துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்