jeevan-works-logo
booked.net
இலங்கை தேர்தலில் வென்ற ராஜபக்சவிற்கு இந்தியபிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து..

Published: Friday, Aug 07,2020 ,07:18:11am

இலங்கையின் 9-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.  மகிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி தாமரை மொட்டு சின்னத்திலும் , ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திலும் போட்டியிட்டன. அதேபோல் சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன. 

பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற்பகலில் வெளியான தபால் வாக்கு முடிவுகளில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி, ராஜபக்சவுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள ராஜபக்ச, இரு நாடுகள் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்த, இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ செய்திகள்