jeevan-works-logo
booked.net
கடைசி வரை போராடிய விமானிகள்.. கேரள விமான விபத்தில் வெளிவரும் புதிய தகவல்கள்..!!

Published: Monday, Aug 10,2020 ,09:48:56am

வெளிநாடு வாழ் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் விமானம், கடந்த 7’ம் தேதி இரவு வந்தது.

இதில், 174 பயணியர் உட்பட, 191 பேர் இருந்தனர். இந்த விமானம், மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று இரவு, 7:40 மணிக்கு தரைஇறங்கியபோது விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து, இரண்டாக பிளந்தது.

தற்போது, அந்தக் கறுப்புப் பெட்டி ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டர் தீபக் வசந்த் சதே தலைமை விமானியாகவும்,  அகிலேஷ்குமார் துணை விமானியாகவும்  இருந்தனர். 

மோசமான வானிலை காரணமாக விமானத்தைத் தரையிறக்குவதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. கோழிக்கோடு விமானநிலைய ஓடுதளம், டேபிள்டாப் வடிவிலானது என்பதால் தரையிறக்குவதில் கடும் பிரச்சனை இருந்துள்ளது. 

விபத்தைத் தவிர்க்க விமானிகள் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள். விமானத்தை சரியாக தரையிறக்க முடியாததால், மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சி செய்துள்ளனர். இரண்டு முறை தறையிறங்க முயற்சித்தும் முடியாமல், விமானத்தின் எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு மீண்டும் தரையிறங்க முயற்சித்துள்ளனர். 

எரிபொருள் எதுவும் இல்லாததால்தான் விமானம் வெடிக்காமல் தப்பியது. தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் கடைசிவரை போராடியிருக்கின்றனர் விமானிகள் இருவரும்.

வீடியோ செய்திகள்