jeevan-works-logo
booked.net
வெள்ளத்தில் மூழ்கும் மும்பை.. கன மழையால் கடும் பாதிப்பு!

மும்பையில் கடுமையாக பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பதினொன்று முப்பது மணி தொடங்கி இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி வரை மும்பையில் 6.3 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

 வாகனங்கள் அனைத்தும் ஊர்வலம் சென்று வருகின்றன.  பாதசாரிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தண்டவாளங்கள் முழுமையாக மூழ்கியிருப்பதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ரயில்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.

வீடியோ செய்திகள்