jeevan-works-logo
booked.net
தமிழகத்தில் மேலும் 5,994 பேருக்கு கொரோனா ஒரே நாளில் 119 பேர் பலி

Published: Monday, Aug 10,2020 ,09:51:14am

தமிழகத்தில் மேலும் 5,994 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 119 பேர் பலி. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 6 ஆயிரத்து 20 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.

இருந்தபோதும், நேற்று ஒரே நாளில் 119 பேர் (தனியார் மருத்துவமனை 34, அரசு மருத்துவமனை 85) உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 129 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 32,25,805 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 70,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்