jeevan-works-logo
booked.net
சென்னையில் மட்டும் 993 பேர்.. தமிழகம் முழுக்க 5,871 பேருக்கு கொரோனா..!! 119 பேர் ஒரே நாளில் இறப்பு...

Published: Thursday, Aug 13,2020 ,07:44:41am

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,12,059 ஆக உயர்ந்துள்ளது. 

 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 119 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா தொற்று  பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 633 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

வீடியோ செய்திகள்