jeevan-works-logo
booked.net
மரம் நடுவது எப்படின்னு விவேக்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. நடிகர் விஜய்க்கு பப்ளிசிட்டி பைத்தியம் மீரா மிதுன் அட்வைஸ்..

Published: Thursday, Aug 13,2020 ,07:54:03am

“வில்லாவில் மரக்கன்று நடுவதெல்லாம் சமூக அக்கறை அல்ல, எங்கு, எப்படி மரக்கன்று நட வேண்டும் என்பதை நடிகர் விவேக்கிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,” என விஜய் ரசிகர்களிடையே விவேக்கை சம்பந்தமில்லாமல் கோர்த்துவிட்டார் பப்ளிசிட்டி பைத்தியம் மீரா மிதுன்.

சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகிய இருவரையும் கடும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன்.  

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்மறையாக செயலாற்றாமல் சமூகம் பயன்பெற நேரத்தை செலவிடுங்கள் என தன் ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, நடிகர் மகேஷ்பாபு வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் நேற்று மரக்கன்று ஒன்றை நட்டார். அதை விமர்சித்த மீரா மிதுன் அதில் நடிகர் விவேக்கை இழுத்து விட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் விவேக், மீரா மிதுனுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். “மகேஷ்பாபு மற்றும் நம்ம விஜய் மில்லியன் கணக்கில் ரசிகர்களை வைத்திருக்கிறார்கள். இயற்கைக்காக அவர்கள் சில விஷயங்களைச் செய்தால் அவர்களது ரசிகர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்து அவர்களும் அந்த நல்ல விஷயத்தைச் செய்வார்கள். ஒருவரை வேறொருவருடன் தயவு செய்து ஒப்பிடாதீர்கள். நமது அற்புதமான நோக்கம் பசுமை உலகமே.

மீரா மிதுன், நீங்கள் பதிவிட்டது மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வுகளை பாதிக்கும். மகேஷ்பாபு மற்றும் விஜய் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள். தயவு செய்து இரண்டு பிரபலங்களை எப்போதும் ஒப்பிடாதீர்கள். இது ஒரு வேண்டுகோள்,” என தெரிவித்துள்ளார்.

பப்ளிசிட்டி பைத்தியமான மீரா மிதுன் இந்த பண்பட்ட பதிலுக்கு பதிலளிக்கையில், “எல்லோரும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள பழக வேண்டும். குறிப்பா பிரபலமானவர்கள் விமர்சனங்களுக்கு அப்பார்பட்டவர்கள் அல்ல. நான் ஏன் மன்னிப்பு கேட்க்கனும்? அவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள பழகிக்கொள்ளட்டும்” அப்டின்னு ட்வீட் பண்ணியிருக்கு. 

வீடியோ செய்திகள்