jeevan-works-logo
booked.net
தமிழக கொரோனா பாதிப்பு.. நேற்றைய நிலவரம். மொத்த பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது..

Published: Friday, Aug 14,2020 ,09:27:04am

தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,549 ஆண்கள், 2,286 பெண்கள் என மொத்தம் 5,835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,355 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 134 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-73) மூலமாக, இன்று மட்டும் 67,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 34 லட்சத்து 99 ஆயிரத்து 300 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

தமிழகத்தில் இன்று 5,146 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,61,459 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,499 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வீடியோ செய்திகள்