jeevan-works-logo
booked.net
சென்னையில் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.! ஆனால் தொற்று பாதிப்பு 1,187 ஆக அதிகரிப்பு..

Published: Saturday, Aug 15,2020 ,09:22:19am

சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 200க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த வார தொடக்கத்தில் வெறும் 26 ஆக குறைந்தது.

 தற்போது மேலும் குறைந்து 13 ஆக உள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் 7 மண்டலங்களில் மட்டுமே உள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 8 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை எனும் நிலை உருவாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் ஒரு தெருவில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலே அந்த தெருவை கட்டுப்பாடு பகுதியாக அறிவித்து வந்து மாநகராட்சி நிர்வாகம். ஆனால், இப்போது தெருவில் தற்போது, ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 3  இடங்களும், கோடம்பாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் தலா 2 இடங்களும் உள்ளன. குறைந்த பட்சமாக வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் தலா 1 இடம் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் நேற்று,  சென்னையில் 1,187 பேரும், திருவள்ளூரில் 495 பேரும், செங்கல்பட்டில் 437 பேரும், குறைந்தபட்சமாக கரூரில் 14 பேரும், கிருஷ்ணகிரியில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 43 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று மட்டும் மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் 83 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 117 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 25 பேரும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். 

வீடியோ செய்திகள்