jeevan-works-logo
booked.net
இ பாஸ் முறயை முற்றிலும் நீக்குக.. தளர்வுகளெல்லாம் வேண்டாம்.. மு க ஸ்டாலின் ஆவேச அறிக்கை..!

Published: Saturday, Aug 15,2020 ,09:24:20am

தமிழகத்தில் இதுவரை இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள் இருந்தும் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

வருகிற 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்துள்ள தமிழக அரசு, இ-பாஸ் முறையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் ஏராளமானோர் இ-பாஸ் பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெற்று காரணங்களைச் சொல்லி இ-பாஸ் மறுக்கப்படுவதாகவும், பத்துக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பித்தாலும் நேர்மையான முறையில் இ-பாஸ் கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

எனவே தமிழக அரசு   இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எளிய மக்கள் இ. பாஸ்க்கு  விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது என்றும் எனவே, இ பாஸ் முறையை முழுமையாக நீக்க வேண்டும் என்று மீன்டும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடியோ செய்திகள்