jeevan-works-logo
booked.net
கிரண் பேடியின் ஆணவ கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு!

Published: Wednesday, Jul 03,2019 ,

பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் குடிநீர்ப் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிதிஆயோக் வெளியிட்ட அறிவிப்பின் படி சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் 2020ஆம் ஆண்டுக்குள் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உண்டாகும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இப்போது தமிழகத்தில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். பருவமழையில் 66 சதவீதம் பொய்த்துவிட்டதாகவும் அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

குடிநீர் பிரச்னை குறித்து அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்கும் விதமாக ஒரு நாள் முழுவதும் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்தும் தமிழக அரசு குறித்தும் ட்விட்டர் இணையதளத்தில் கொச்சையாக கருத்து தெரிவித்ததற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.  ஆனால் ஆளுநர் குறித்து விவாதிக்க அனுமதி இல்லை என்று அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி விட்டார்.இதை கண்டிக்கும் விதமாக திமுக வெளிநடப்பு செய்தது.

பிரச்சனை மொத்தமும் கருத்து தெரிவிப்பதிலும் எதிர் கருத்து  தெரிவிப்பதில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது.  அரசியல்வாதிகளிடம் இருந்து இதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது.  இதற்கிடையில் பொதுமக்கள் அங்காங்கே தாமாக ஒன்று திரண்டு ஏரிகளையும் குட்டைகளையும் தூர்வாரி வருகின்றனர்.  அப்படியே பிளாஸ்டிக் கழிவுகள் குறித்தும் நம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டால் அனைவருக்குமே பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அதுவரையில் இந்த கருத்து கந்தசாமிகள் இதுபோன்ற தேவையில்லாத அணிகளை  பிடுங்கிக் கொண்டு இருக்கட்டும்,

வீடியோ செய்திகள்