jeevan-works-logo
booked.net
தமிழகத்தில் கொரோனா மொத்த இறப்பு எண்ணிக்கை 5,114ஆக அதிகரிப்பு! நேற்று மட்டும் 117 இறப்பு...

Published: Sunday, Aug 16,2020 ,08:07:16am

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,114ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,14,260 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 127 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,236 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,72,251 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,213 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 70,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 34,43,897 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வீடியோ செய்திகள்