அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே அதிபராக இருக்கும் டிரம்ப் இந்த முறை போட்டியிடுகிறார்.
துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் என்பவர், டிரம்ப் கட்சியை சேர்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நியூயார்க் நகரில் பொலிஸ் நல சங்கத்தில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் விட எனக்கு தான் இந்தியர்கள் ஆதரவு அதிகமாக உள்ளது என்றார்.
ஜோ பிடன் அதிபர் ஆனால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. கமலா ஹாரிஸ் அவருடைய கட்சிக்கு பின்னடைவை தருவார். பிடனை விட அவர் மோசமானவர் கமலா ஹாரிஸ் பொலிசாருக்கு எதிராக நடந்து கொள்வார்.
இவர் இந்தியப் பாரம்பர்யத்தை உடையவர். ஆனால் அதைவிட அதிக இந்தியர்கள் என்னிடம் உள்ளனர். நான் அதைச் சோதனை செய்துள்ளேன், நான் சொல்வது உண்மைதான் அவரைவிட எனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு உள்ளது. எனவே, ஹாரிஸ் எனக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்று கூரியுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இதனால், கமலாவிற்கு இந்தியர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.