jeevan-works-logo
booked.net
எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது... மகன் சரண் அறிவிப்பு...

Published: Sunday, Aug 16,2020 ,08:19:58am

கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி அவர்களின் நுரையீரல் நன்றாக வேலை செய்வதாகவும், அப்பா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவரின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. 

இந்நிலையில், அவரின் மகனான எஸ்.பி.சரண், அவரின் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் உடல்நிலை குறித்து செய்தி வெளியானவுடனே தொடர்ந்து போன் கால்கள் எனக்கு வந்த படி இருக்கின்றன..

ஆனால் அவை அனைத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக வீடியோவில் அனைவருக்கும் அப்பாவின் நிலை குறித்து தெரிவிக்க விரும்புகிறேன். இதை நீங்கள் அனைவருக்கும் பகிருங்கள், அப்பா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

அவர் நன்றாக இருக்கிறார். அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. நேற்றை விட இன்று அவருக்கும் பொருத்தப்பட்டிருக்கும் வெண்டிலேட்டர் உதவியால் நுரையீரல் நன்றாக வேலை செய்கிறது.அவர் தேறி வருகிறார். மருத்துவர்கள் நிச்சயமாக திரும்பிவிடுவார் என்று கூறுகின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.  

நம் அனைவரின் விருப்பமும் அதுவே… 

இதற்குள்ளாக, சில விஷமிகள் அவர் இறந்துவிட்டதாக பொய்யான தகவல்களை பரப்பினர்.  தனக்கு வரும் தகவல்களை சரிபார்த்து பகிரும் பழக்கத்தை நம்மவர்கள் எப்போதுதான் கற்றுக்கொள்ளப்போகிறார்களோ?!

வீடியோ செய்திகள்