jeevan-works-logo
booked.net
நேற்று கொரோனா பலி 125 பேர்... கோவையில் மட்டும் 14... உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை...

Published: Monday, Aug 17,2020 ,07:08:52am

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 125 பேர் உயிரிழந்தனர்.  கொரோனா உயிரிழப்பு 5,766 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும் பலியாகி உள்ளனர்

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 68,444 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 35,81,939 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1,196 பேரும், செங்கல்பட்டில் 422 பேரும், கோயம்புத்தூரில் 395 பேரும், திருவள்ளூரில் 488 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116,650 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கோவையில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

வீடியோ செய்திகள்