jeevan-works-logo
booked.net
சென்னையில் திறக்கப்படும் டாஸ்மாக்!! ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டும்... இன்னும் என்னென்ன கட்டுப்பாடுகள்!?

Published: Monday, Aug 17,2020 ,07:14:10am

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மற்றும் அதன் காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், சென்னையில் வரும் 18ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

டாஸ்மாக் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும்,   காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், கடைகளுக்கு செல்லும் நபர்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

வீடியோ செய்திகள்