சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி - மாநில இணை செயலர் பாபு முருகவேல், ஆன்லைன் வாயிலாக நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதாவது, நாடு முழுதும், நேற்று முன்தினம், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றும் போதும், இறக்கும் போதும், அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும்.
சுதந்திர தினத்தன்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், முதன் முதலாக தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அவர், தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை.
தன் கட்சிக்கொடியை ஏற்றிச் செல்வது போல, தேசியக்கொடியை அவமதித்துள்ளார். அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்..