jeevan-works-logo
booked.net
சென்னையில் இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக்.! கட்டுப்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!

Published: Tuesday, Aug 18,2020 ,06:43:47am

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் செயல்படும் 700க்கும் மேற்பட்ட மதுபான கடைகள்  முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக  டாஸ்மாக் மதுபான கடைகள் மார்ச் மாதம் 24ஆம் தேதியோடு மூடப்பட்டன. சென்னை தவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 4,550 கடைகள் மே மாதம் 7ஆம் தேதியே மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

நீதிமன்ற விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால் கடைகள் மே 9ஆம் தேதி மூடப்பட்டன. பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று கடைகள் மீண்டும் மே 16ஆம் தேதியன்று திறக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை நகர காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது: 

  1. வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி விற்பனையை நடத்த வேண்டும். ஒரு நாளைக்கு 500 டோக்கன்களை மட்டுமே வழங்க வேண்டும்.

  2. வாடிக்கையாளர்கள் நிற்பதற்கு ஷாமியானா பந்தல்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

  3. 50 பேர் வரிசையில் நிற்க ஏதுவாக 50 வட்டங்களை இட வேண்டும்.

  4. கடையில் இடமிருந்தால் இரண்டு கவுன்டர்களை அமைக்க வேண்டும்.

  5. எல்லா வாடிக்கையாளர்களையும் சானிடைசரால் சுத்தம் செய்த பிறகே கவுன்டரில் அனுமதிக்கப்பட வேண்டும்.

  6. கடையின் பணியாளர்கள் கையுறை, முக கவசம் அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும்

வீடியோ செய்திகள்