jeevan-works-logo
booked.net
தெலுங்கானா மாநில பெண் வனத்துறை அதிகாரி தாக்கப்பட்டதன் பின்னணி. உடன் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்த அவலம்!!

Published: Monday, Jul 01,2019 ,

மரங்கள் நிறைந்த பரப்பை 24 சதவீதத்திலிருந்து 33  சதவீதமாக உயர்த்தும் ஹரிதா ஹரம் திட்டம் தெலுங்கானாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணி நடைபெற்று வருகிறது. கொமாரம்  பீம் அசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்று வந்தது . அப்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சித்தூர் எம்எல்ஏ கொனேரு கொனப்பாவின் சகோதரர் கிருஷ்ணா ராவ் தலைமையில் ஒரு கும்பல் வந்தது. கையில் தடிகளுடன் வந்த அந்த கும்பல்  மரக்கன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பணியில் ஈடுபட்டு இருந்தவர்களை தாக்க தொடங்கியது. 

போலீசார் அங்கு இருந்த போதும் வன்முறை தடுக்க எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் டிராக்டர் மீது ஏறி சமாதானம் பேச முயன்ற வனத்துறை அதிகாரி அனிதாவை  வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலைவெறியோடு தாக்கினார். இதையும் உடன் இருந்த போலீசார் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். 

கையில் துப்பாக்கிகளை வைத்திருந்தபோதும்,  காவல்துறை அதிகாரியை தாக்கிய போதும் காவல்துறையினர் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை  இவர்கள் மரம் நட சென்ற பகுதி அமைச்சர் கொனேரு கொனப்பா ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிரச்சினைக்குரிய இடம் என்பது தெரியவந்திருக்கிறது.  ஆகவே திட்டமிட்டு வனத்துறை அதிகாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

பின்னர்,  கொனேரு கொனப்பா  மற்றும் கிருஷ்ணர் மீது கொலை முயற்சி  வழக்கு பதிவு செய்த காவல்துறை அவர்களை கைது செய்தது.  ஜில்லா பரிஷத் துணைத் தலைவர் பதவியிலிருந்து கிருஷ்ணராவ் விலகினார். உள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

அனைத்துக் கட்சிகளும் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.  தெலுங்கானாவில் காட்டு தர்பார் நடப்பதாக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 

வீடியோ செய்திகள்