jeevan-works-logo
booked.net
விநாயகர் சதுர்த்தி விழா கிடையாது..! ஒரு நாளைக்கு 6000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழலில் உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று எச்சரிக்கை!!

Published: Wednesday, Aug 19,2020 ,07:30:45am

விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் ஊர்வலங்கள் செல்வதற்கும் தடை விதித்துள்ளது. 

பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இந்த தடையை நீக்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இது தொடர்பாக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்து மனு  தாக்கல் செய்தார். 

ராஜபாளையம் அருகே தர்மாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் கடந்த 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

21, 22ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் 25 பேருக்கு இலவச திருமணமும் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாட்டில் ஒருநாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவரும் இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க முடியும்? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று கூறினர். மேலும் மனுதாரர் மனுவை திரும்பப் பெறாவிட்டால் அதிகமான அபராதம் விதித்து தள்ளுபடி செய்வதாக எச்சரிக்கை விடுத்தார்.

வீடியோ செய்திகள்