jeevan-works-logo
booked.net
தூத்துக்குடி காவலர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம்.. குற்றவாளியும் இறந்ததாக அறிவிப்பு!!

Published: Wednesday, Aug 19,2020 ,07:27:16am

தூத்துக்குடியில் குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். வெடிகுண்டு வீசிய குற்றவாளி துரைமுத்து என்பவரும்  உயிரிழந்தார்.

2012 நவம்பர் 24ஆம் தேதி ஏரல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வினோத், ராமச்சந்திரன் என்ற இருவர் கொல்லப்பட்டனர். இதில் துரைமுத்து என்பவர் சந்தேக நபராக கருதப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவர் மேலமங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர். திருநெல்வேலியில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கிலும் இவர் தேடப்பட்டுவந்தார்.

தூத்துக்குடி முறப்பநாடு நாடு அருகே மணக்கரை பகுதியில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, துரைராஜ் என்ற ரவுடி, வெடிகுண்டுகளை வீசினான் இதில், சுப்ரமணியன் என்ற போலீஸ்காரருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கு பிறகு துரைமுத்துவும் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. அவரது உயிரிழப்பிற்கான காரணம் தெளிவாகவில்லை.

இதனையடுத்து, அங்கு எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். உயிரிழந்த துரைராஜ் மீது 2 கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக எஸ்.பி., தெரிவித்துள்ளார். கொலை திட்டத்துடன் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த துரைராஜை பிடிக்க சென்ற போது, வெடிகுண்டை வீசியதாக எஸ்பி தெரிவித்தார். 

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆழ்வார் திருநகரி முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்