முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக டெல்லி ராணுவ மருத்துமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 10-ந்தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் சிறிய கட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபரேஷன் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.