jeevan-works-logo
booked.net
மதுரை சித்திரைதிருவிழாகூட இந்த ஆண்டு இல்ல விநாயகர் சிலை வைக்க ஏன் அவசரப்படுகிறீர்கள்? நீதிபதிகள் கேள்வி..!

Published: Friday, Aug 21,2020 ,06:55:16am

 கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  அவர் தன் மனுவில், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. சமூக இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என்றும், ஊர்வலம் செல்லக்கூடாது என்றும் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்று கூறி இருந்தார். 

பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உரிய நிபந்தனைகளுடன் இந்த விழாவுக்கு அனுமதிக்க வேண்டும், என்று அவரது வழக்கறிஞர் வாதங்களை எடுத்து வைத்தார். 

அரசு தரப்பு வழக்கறிஞர், விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடவும், அரசு அனுமதித்துள்ள கோவில்களுக்கு சென்று வழிபடவும் எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்துவிநாயகர் சதுர்த்தி விழாஊர்வலத்துக்கு தடை விதித்து இருப்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தனர். பழமையான, புகழ்பெற்ற மதுரை சித்திரைதிருவிழாகூட இந்த ஆண்டு நடக்காத நிலையில், விநாயகர் சிலை வைக்க ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

வீடியோ செய்திகள்