jeevan-works-logo
booked.net
ஜிமெயில், கூகுள் ட்ரைவ் சேவை முடங்கியது..!! லாக் இன் செய்ய, அட்டாச்மென்ட் அனுப்ப முடியாத நிலை ..

Published: Friday, Aug 21,2020 ,06:57:23am

கூகுளின் ஜிமெயில் சேவை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நேற்று முடங்கியது. ஜிமெயில் கணக்கில் லாக் இன் செய்ய முடியவில்லை என்றும் மெயிலுடன் படங்கள், பைல்கள் போன்ற விஷயங்களை இணைத்து அனுப்ப முடியவில்லை என்று பலரும் தெரிவிக்கத்தொடங்கினர். 

ஜிமெயில் உபயோகிப்பவர்களில் 62 சதவீதம் பேருக்கு அட்டாச்மென்ட் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 27 சதவீதம் பேருக்கு தங்கள் கணக்கை லாக் இன் செய்ய முடியவில்லை என்றும் 10 சதவீதம் பேருக்கு தங்களால் மின்னஞ்சல்களை பெற முடியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இப்பிரச்னை தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும். அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், உபயோக்கிப்பாளர்கள் பொறுமை காக்கும் படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடியோ செய்திகள்