jeevan-works-logo
booked.net
தமிழகத்தில் நேற்றுமட்டும் ஆறாயிரம் பேர்.. ஒட்டு மொத்த இந்தியாவில் 69 ஆயிரம் பேர்.. கொரோனா உச்சம்..!!

Published: Saturday, Aug 22,2020 ,07:59:35am

தமிழகத்தில் நேற்று மட்டும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால்  இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. 

ஒட்டு மொத்த இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று உறுதியானது. இது முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சம் ஆகும். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 36 ஆயிரத்து 925 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 116 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,742 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,913 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டியம் முதல் இடத்தில் தொடர்கிறது. இந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 33 ஆக உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் (6,123) உள்ளது. 3-வது இடத்தில் கர்நாடகம் (4,327) இருக்கிறது.

வீடியோ செய்திகள்