jeevan-works-logo
booked.net
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்.. தடையை மீறுமா இந்து அமைப்புகள்?!

Published: Saturday, Aug 22,2020 ,08:02:12am

 இந்த ஆண்டும் வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட  போவதாக இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு, தமிழ் மக்கள் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, பல்வேறு இந்து அமைப்புகளை அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையின் முடிவில் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது. ஊர்வலங்கள் நடத்த கூடாது. பெருந்தொற்று காலத்தில் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் படி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், கோயில்களில் பூஜைகளின்போது, உபயதாரர் மண்டகப்படிதாரர் ஆகியோர் கலந்து கொள்ளலாம். அதுவும் 5 பேருக்கு மேல் கூடாமல் இருக்க வேண்டும். இந்த கூட்டத்தையும் தவிர்த்தால் சிறப்பானது என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாகப் பரவி வரும் கொரோனாத் தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்