jeevan-works-logo
booked.net
இந்திய அரசியலில் ராகுல் காந்தியின் தேவை.

ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தமே ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இருந்து எது சரியோ அதைச் செய்வதுதான்.  ஆட்சியில் இருக்கும் கட்சி மீது மக்களுக்கு அதிகம் என்றால் மக்கள் தேர்ந்தெடுக்க இன்னொரு கட்சி இருக்க வேண்டும்.  ஆளுங்கட்சியின் தவறுகளை, குறைகளை சுட்டிக்காட்ட வலுவான எதிர்க்கட்சி என்பது அவசிய தேவை. 

 அவர் எதிர்க்கட்சியாக இருக்கும்  ஒரு கட்சி இந்தியா முழுக்க பரவியுள்ள ஒன்றாக இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட தரப்பினருக்கும், ஜாதியினருக்கும், மதத்தினருக்கும்  ஆதரவாக செயல்படும் ஒரு கட்சி அப்படிப்பட்ட ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருக்க இயலாது. 

 இந்தியா இன்று இருக்கும் சூழ்நிலையில்  நாடு முழுவதும் பரவியுள்ள, பொதுவான நோக்கங்களை செயல்படுத்தும் ஒரு கட்சியாக இருப்பது காங்கிரஸ் மட்டுமே.  வலுவான ஆளும் கட்சியாகும் பிஜேபி செயல்படும் ஒரு காலகட்டத்தில் அதற்கு நிகரான பலம் உள்ள ஒரு கட்சியாக மொத்த இந்தியாவில் இருப்பது காங்கிரஸ் மட்டும்தான். 

ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும்,  பரம்பரை அரசியலில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் அவர் தெரிவித்த போதும்,  காங்கிரஸை இப்பொழுது காப்பாற்றுவதற்கு ஒரே வழியாக காணப்படுவது ராகுல் மட்டும் தான்.  மத, வட்ட அடையாளம் காங்கிரஸில் இருந்து ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தெரியக்கூடிய ஒரு தலைவர் என்றால் அது ராகுல் மட்டும் தான்.  நமக்கு காங்கிரஸ் கட்சியின் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் என் இருப்பை கண்டிப்பாக தவிர்க்க இயலாது.

ஆகவே,  ஜனநாயக ரதம் சரியாக ஓட வேண்டும் என்றால் ராகுல் தலைமையில் காங்கிரஸ் பணியாற்றி ஆக வேண்டும்.  இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்றால் அவர் நாடெங்கும் அறியப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.  காங்கிரஸில் அப்படி ஒரு தலைவர் ராகுல் மட்டும்தான்.

காங்கிரஸ் தேர்தலில் தோற்கலாம் ஜெயிக்கலாம்.  ஆனால் அதன் தலைவராக வலுவான ஒருவர் இருந்தாக வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் கட்டாயத் தேவை.  அவ்வாறு இல்லாமல் போகும் எனில் அது நம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான இழப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.  இது காங்கிரசின் உட்கட்சி விவகாரம் அல்ல.


இவண்

இப்படிக்கு

விஷமுண்டார் மகன்