jeevan-works-logo
booked.net
புத்தக அறிமுகம்: பவர் ஆஃப் நவ்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஏகார்ட் டோலே என்பவர் எழுதிய புத்தகம் தான் Power of Now. உலகமெங்கும் மிகச் சிறப்பாக விற்பனையாகி வரும் இந்த புத்தகம்  ஒரு தலை சிறந்த ஆன்மீக புத்தகம் ஆகும். இந்த தலைமுறைக்கான ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்த நூல் என்று இதை பலரும் குறிப்பிடுகின்றனர்.

 உண்மையில் இந்த புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது? 

 கடந்த காலத்தை குறித்து கவலைப்படாமலும்,  எதிர்காலத்தைக் குறித்து பயப்படாமலும் நிகழ் காலத்தை முழுமையாக வாழ்வதால் மனிதனது பரிணாம வளர்ச்சியில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உருவாகும் என்பதை முழுமையாக விவரிக்கிறது இந்த நூல். 

 ஒரு விலங்கு போல வாழ்ந்து வந்த மனிதன்,  தனக்கு ஏற்பட்ட அனுபவங்களால் சிலவற்றை நினைவில் நிறுத்திக் கொள்கிறான்.  நெருப்பு சுடும், புலி சிங்கம் போன்ற விலங்குகள் நம்மைத் தாக்கும், இன்று மழையில் நனைந்து விட்டால் பின்னர் சளி பிடிக்கும் -  இதுபோன்று அனுபவங்களை நினைவுகளாக மனிதன் சேமிக்கத் தொடங்கினான். இதுபோன்ற சேமிக்க தொடங்கிய விபரங்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டது.  ஒரு கட்டத்தில், இவ்வாறு சேமிக்கப்பட்ட விவரங்களை மனித இனத்தை ஆட்சி செய்யத் தொடங்கியது. 

 நமக்கு உதவும் என்று சேமித்த விஷயங்கள்,  நமது வாழ்வை கட்டுப்படுத்த தொடங்கின. அதாவது நமது மனம் நம்மை கட்டுபடுத்துகிறது…  மனம் என்பதே ஒரு நோய் தான், நமது சிந்தனை பழக்கம் ஒரு அடிமைத்தனம் என்பது போன்ற விஷயங்களை இந்த புத்தகம் தீர்க்கமாக விளக்குகிறது.

 நாம் வேறு நம் மனம் வேறு என்பதை உணர்ந்துகொள்ள இந்த புத்தகம் ஒரு உன்னதமான சாதனம். 

 இது வெறுமனே ஆன்மீகத்தை மட்டும் போதிப்பதில்லை.  நிகழ்காலத்தோடு இணக்கம் ஆவதன் மூலம், வாழ்வியல் வெற்றிகளை அடைவதையும் குறிப்பிடுகிறது. 

 நாம் வாழ வேண்டியது இந்த கணத்தில் தானே அல்லாமல்  போன காலத்திலோ அல்லது வரும் காலத்திலும் இல்லை. நம்மிடம் இருப்பது அந்த நிகழ்காலம் மட்டுமே.  அதோடு இணக்கமாக இருக்க வேண்டியது நமது கடமை. 

 கேள்வி பதில் முறையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம்,   இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆன்மீக புத்தகமாக கருதப்படுகிறது.


இவண்

இப்படிக்கு

புத்தக அறிமுக குழு