சென்னை, மார்ச்-14-
சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை வேளைகளில் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20-ந்தேதி இரவு விடையூர்திகாட்சி(ரிஷப வாகனம்), 22 ஆம் தேதி காலை சந்திரசேகர் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து பிரம்மனுக்கு காட்சி அருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஆம் தேதி பிற்பகல் கல்யாண சுந்தரம் திருக்கல்யாணம் மற்றும் வன்னி மர காட்சி கிடக்கிறது. 25ஆம் தேதி காலை சந்திரசேகரர் திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 26 ஆம் தேதி மாலை தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
0 கருத்துகள்