Breaking News

6/recent/ticker-posts

காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பண்ட் 18 ரன்னில் அவுட் டெல்லி அணி 174 ரன்கள் குவிப்பு

 


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2-வது போட்டி இன்று சண்டிகாரில் நடைபெற்றது.

இதில் டெல்லியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

டேவிட் வார்னர் 29 ரன்களும், ஷான் மார்ஷ் 20 ரன்களும், ஹோப் 32 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். விபத்தில் சிக்கி காயத்தில் இருந்து மீண்ட  ரிஷப் பண்ட் நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கேப்டனாக களம் இறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  அவர் 13 பந்து களில் 18 ரன்கள் மட்டும்  எடுத்து ஹர்ஷல்பட்டேல்  பந்தில் கேட்ச் ஆனார்.  ரிஷப் பண்ட் 2 பவுண்டரி அடித்திருந்தார்.20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174  ரன்கள் எடுத்து இருந்தது .

அபிஷேக் பொரேல் 

கடைசி கட்டத்தில் இளம்வீரர் அபிஷேக் பொரேல் 10 பந்தில் 32 ரன்கள் விளாசினார்.ஹர்ஷல்பட்டேல் வீசிய கடைசி ஓவரில்  மட்டும் பொரேல்  25 ரன்கள் குவித்தார். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி எந்த இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்