விசாகப்பட்டினம்,மார்ச்.31-
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் விசாகப்பட்டினத்தில்உள்ள மைதானத்தில் மோதின. டாஸ்ஜெயித்த டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷாவும், டேவிட் வார்னரும் பந்துகளை நாலாபுறும் அடித்துநொறுக்கினர். வார்னர் 52 ரன்களும், பிரித்வி ஷா 42 ரன்களும் எடுத்து ஆட்டம்இழந்தனர்.
இதன் பின்னர் இறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் நிதானமாக ஆடி இறுதி கட்டத்தில் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முடிவில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்ட இழப்புக்கு 191 ரன்கள்குவித்தது.
ரிஷப்பண்ட் கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கிபின்னர் இந்த ஐ.பி.எல். போட்டியில் தான் விளையாடுகிறார். முதல் 2 போட்டிகளில் அவர் எதிர்பார்த்த அளவு ரன்களை குவிக்க வில்லை. ஆனால் இன்று அவர் பழைய வேகத்தில் விளையாடி ரன்களை குவித்தார்.
இன்று அவர் விபத்துக்கு பின்னர் எடுத்த முதல்அரை சதம் ஆகும். ரிஷப் பண்ட் பழையபடி பார்முக்கு திரும்பி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது. ஆனால் ஆரம்பமே அந்த அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
0 கருத்துகள்