டெல்லி,மார்ச்.17-
பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ந்தேதி முதல் நடைபெற உள்ளன.வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த 2 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2-ம் தேதியே முடிவடைவதால் வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
0 கருத்துகள்