மாஸ்கோ நகரின் மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்னும் அரங்கம் உள்ளது.இங்கு நேற்று இரவு இசை கச்சேரி நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட அரங்கில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர் .
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது திடீரென 10-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் கையில் கொண்டு வந்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக அரங்கில் இருந்தவர்களை நோக்கி சுட்டனர். மேலும் வெடிகுண்டுகளையும் வீசினர்.
உள் அரங்கில் நடந்த இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் அரங்கம் தீப்பிடித்து எரிந்தது. உயிர் தப்பிக்க பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பலர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பு அதிகாரிகள் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை வேட்டையாடி வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
0 கருத்துகள்