Breaking News

6/recent/ticker-posts

அரபிக் கடலில் மீன்பிடி படகை கைப்பற்றி கொக்கரித்த கடற்கொள்ளையர்கள் 9 பேரை கொத்தாக அள்ளிய இந்தி கடற்படை பாகிஸ்தானிய மீனவர்கள் 23 பேர் அதிரடியாக மீட்பு

 
ஈரானிய மீன்பிடி படாகான ‘அல்-கம்பர்’ என்ற படகில் 23 பாகிஸ்தானியர்கள் அரபிக்கடலில் சோகோட்ராவின் தென்மேற்கில் சுமார் 90 நாட்டிங்கல் மைல் தொலைவில் இருந்தனர்.

நேற்று முன்தினம்(28&ந்தேதி) மாலை படகில் ஆயுதங்களுடன் வந்த  கடற்கொள்ளையர்கள் மீன்பிடி படகினை சுற்றி வளைத்து கைப்பற்றினர். மேலும்அதில் இருந்தவர்கள் அனைவரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பிணைக்கைதிகளாக கொண்டு வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரபிக்கடலில் ரோந்து பணியில் இருந்த 2 போர்க்கப்பல்கள் கடற்கொள்ளையர்கள் இருந்த பகுதிக்கு அனுப்பப்பட்டன
கடற்படை வீரர்கள் கப்பலில் விரைந்து சென்று கடற்கொள்ளையர்கள் கைப்பற்றிய படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட படகை இந்திய கடற்படை கப்பல்கள் இடைமறித்தது.

இதைத்தொடர்ந்து படகில் இருப்பவர்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையும் சாமர்த்தியமாக எடுக்கப்பட்டது.சுமார் 12 மணிநேரம் நடந்த கடும் எச்சரிக்கை மற்றும் அதிரடி நடவடிக்கை காரணமாக கடற்கொள்ளையர்கள் 9 பேரும் ஆயுதங்களுடன் இந்திய கடற்படையிடம் சரண்அடைந்தனர்.
மேலும் படகில் இருந்த 23 பாகிஸ்தானியர்களையும் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் தங்களது பயணத்தைதொடர தேவையான ஏற்பாடுகளை இந்திய கடற்படையினர் செய்து கொடுத்தனர்.


கைதான 9 கடற்கொள்ளையர்களும் மேல் நடவடிக்கைக்காக இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறார்கள் என்று இந்திய கடற்படை தெரிவித்து உள்ளது. அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை இந்திய கடற்படை ஒட்ட நறுக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 





கருத்துரையிடுக

0 கருத்துகள்