Breaking News

6/recent/ticker-posts

பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் ரூ. 95 லட்சம் செலவு செய்யலாம்



சென்னை, மார்ச்,18-

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக  ஏப்ரல்19-ந் தேதி ஓட்டு பதிவு நடைபெறுகிறது .இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது.

வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை இன்னும் முடியவில்லை. வேட்பாளர்களை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  தங்களது செலவு கணக்கை தேர்தல் முடிந்ததும் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தேர்தலின் போது வேட்பாளர்கள் செய்யும் செலவு விவரங்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.



இந்த நிலையில் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகையை தேர்தல் ஆணையம் உயர்த்தி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம்ஆண்டு ரூ.75 லட்சம் ஆக இருந்த பாராளுமன்ற வேட்பாளர்கள் செலவு தொகை தற்போது ரூ. 95லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழ்நாடு அரசிடம் ரூ. 750 கோடி  கோரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்