Breaking News

6/recent/ticker-posts

திருப்பதியில் நிலநடுக்கம்

 திருப்பதி, மார்ச்.14-

ஆந்திர மாநிலம் திருப்பதி நகரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

 இந்த நிலையில் இன்றுஇரவு 8.43 மணிக்கு திருப்பதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது.இது ரிக்டர் அளவுகோளில் 3.9  ஆக பதிவானது. லேசான நிலநடுக்கம் என்பதால் பொதுமக்கள் பெரிய அளவில் உணரவில்லை. நிலநடுக்கம் பற்றிய தகவல் பரவியதும் திருப்பதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்