பாராளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழன் திடீரென மாற்றப் பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-
அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.4.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிம்லா முத்துசோழன் அவர்களுக்கு பதிலாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜான்சிராணி தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜான்சி ராணி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், திசையன்விளை பேரூராட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னாள் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகவும் இருந்து உள்ளார்.
0 கருத்துகள்