Breaking News

6/recent/ticker-posts

தள்ளிப் போகும் பள்ளிகள் திறப்பு

 


சென்னை,மார்ச்.17-

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பார்க்கும் படையினர் பணப்பட்டு வாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுகள் முடிந்ததும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம் . பின்னர் மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படும் .

இதைத்தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தது .ஆனால் இந்த முறை பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்