புதுடெல்லி, மார்ச் 18-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநில காவல் துறை டிஜிபி மற்றும் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த உள்துறைச் செயலாளர் களை நீக்கும்படி மாநிலங்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் மிசோரம், இமாச்சலப் பிரதேச மாநில கூடுதல் நிர்வாகத் துறை செயலாளர்களையும் நீக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், மகாராஷ்டிர மாநிலம் பிர்ஹான் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹலையும் நீக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
0 கருத்துகள்