Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் கிரிக்கெட் சென்னை அணிக்கு முதல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அனுஜ் ரவாத் 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் டூப்ளிசஸ் 35 ரன்னும் எடுத்து இருந்தனர். விராட் கோலி 21 ரன்கள், மேக்ஸ்வெல்,பதிட்கர் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாட தொடங்கியது.



 தொடக்க வீரராக ருத்ராஜ் கெய்க்வாட்டுடன் களமிறங்கிய நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் அவர் 3 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் விளாசினார். கெய்க்வாட் 15 ரன், ரகானே 27 ரன் எடுத்து அவுட் ஆனார்கள் இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சிவம் டூபேரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதி சென்றனர் சிவம் துபே 28 பந்தில் 34 ரண்களும்,ஜடோஜா 17 பந்தில் 25 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். முடிவில் சென்னை அணி 18.4 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேமரூன் கிரீன் 2விக்கெட்டும்,கரண் ஷர்மா யாஷ் தயால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சென்னை அணி சார்பில் முஸ்தபீர் 4 விக்கெட்டும்,தீபக்சார் ஒரு விக்கெட்டும் எடுத்து இருந்தார்கள்.
நன்றி:ஐபிஎல் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்