Breaking News

6/recent/ticker-posts

பெண்கள் பிரீமியர் லீக் பெங்களூர் அணி சாம்பியன்

 



டெல்லி,மார்ச்,17-

பெண்கள் பிரிமியர் லீக் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 18 .3ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி 19.3ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மந்தனா 31 ரன்னும், ஷோபி  டெவின் 32 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

பின்னர் விளையாடிய  எல்லீஸ் பெரி-ரிச்சாகோஷ் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். எல்லீஸ் பெரி 35 ரன்னும், ரிச்சாகோஷ் 17  ரன்னும்எடுத்தனர்.

பெங்களூரு அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகள், மோலினக்ஸ் 3 விக்கெட்டுகள் மற்றும் ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சாம்பியன் கோப்பை வென்ற பெங்களூர் அணிக்கு விராட் கோலி சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்