Breaking News

6/recent/ticker-posts

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில்,பைரவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி(48).
நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரி சோதித்து பார்த்ததில் மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி மரணம் அடைந்து  விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்க பட்டு உள்ளது.டேனியல் பாலாஜி மறைவு பற்றி அறிந்ததும் தமிழ் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக டேனியல் பாலாஜி வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்