Breaking News

6/recent/ticker-posts

தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய மோடி முயற்சி- ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச்.31- டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து டில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி,சரத்பவார், பிரியங்கா காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:- கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் கேட்டிருப்போம். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.இதை நரேந்திர மோடி நாட்டின் ஒரு சில தொழிலதிபர்களுடன் இணைந்து செய்து வருகிறார். காங்கிரசின் வங்கிக்கணக்கை முடக்குகிறார்கள். என்ன மாதிரியான தேர்தல் இது. பாராளு மற்ற தேர்தலில் வெற்றி இடங்கள் 400ஐ தாண்டும் அவர்கள் கூறுகிறார்கள். ஈ.வி.எம். எந்திரங்கள் இல்லாமல், மேட்ச் பிக்சிங் இல்லாமல் இருந்தால் 180ஐ தாண்டப்போவதில்லை.

 இந்திய மக்களின் கைகளில் இருந்து அரசியல் சாசனத்தைப் பறிப்பதுதான் மேட்ச் பிக்சிங்கின் ஒரே குறிக்கோள். ஊடகங்களை வாங்கலாம். ஆனால் மக்களின் குரலை வாங்க முடியாது‌. எந்த சக்தியாலும் இந்தியாவின் குரலை நசுக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள். இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. நாட்டையும் அரசியல்சாசனத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல். இவ்வாறு ராகுல் கூறினார். கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும் போது,ராமர் சத்தியத்திற்காக போராடியபோது, அவரிடம் சக்தி இல்லை, வளங்கள் இல்லை. ஆனால் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, நம்பிக்கை, அன்பு, தொண்டு, பணிவு, பொறுமை, தைரியம் ஆகியவை இருந்தன. அதிகாரம் யாரிடமும் என்றென்றும் நிலைத்திருக்காது, அதிகாரம் வந்து சேரும், பிறகு சிதைந்து விடும் என்பதை பிரதமர் மோடியிடம் சொல்ல விரும்புகிறேன் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்