Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் பா.ஜனதாவில் மீண்டும் சேர்ந்த தமிழிசை ஆவேசம்

சென்னை, மார்ச்,20-

தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதல்முறையாக இன்று கமலாலயம் வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலை முன்னிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தன்னை மீண்டும் பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். அவருக்கு பா.ஜனதா உறுப்பினர் அட்டையை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். அப்போது அவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தலைவராக இருந்து ஆளுநராக மாறி தொண்டராக இறங்கி வந்துள்ளேன். தம்பியிடம் இருந்து அக்காள் என்ற முறையில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர் அட்டையைப் பெற்று இருக்கிறேன். 

கவர்னர் பதவியை விட பா.ஜனதா உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது.கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்து உள்ளேன். பாத யாத்திரையாக தமிழகம் முழுவதும் சுற்றி வருவது எளிதானது அல்ல. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தலைமையிடம் கூறி உள்ளேன். தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்துதான் நிச்சயம் போட்டியிடுவேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்