டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டு விசாரணை செய்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்க படுகிறார். கடந்த 60 நாள்களில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 2 மாநில முதல்வர் களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
கெஜ்ரிவால் கைதுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லி முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.நாளை கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்