தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. சிதம்பரம் தொகுதியில் மீண்டும் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தனது தாயிடம் ஆசிபெற்றார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் இன்று அம்மாவிடம் வாழ்த்துப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
0 கருத்துகள்