புதுச்சேரி, மார்ச்,18-
தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன்.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் தற்போது திடீரென தமிழிசை சௌந்தரராஜன் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.த தமிழிசை தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் அவர் களம் இறங்க இருப்பதாகவும்,புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ரி
இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டிய வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்