Breaking News

6/recent/ticker-posts

வங்கதேச எல்லையில் கட்டுக்கட்டாக பணத்துடன் சென்னை போலீஸ்காரர் கைது


 சேலையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜான் செல்வராஜ். இவர் நீதிமன்ற அலுவல் விவகாரங்களை பார்த்து வருகிறார். மடிப்பாக்கத்தில், தங்கி இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு வங்காளதேச எல்லையில் சப்- இன்ஸ்பெக்டர்  கட்டுக்கட்டாக பணம், அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டு உள்ளார்.
அவர் எதற்காக வங்கதேசத்திற்கு சென்றார்? காரணம் என்ன? சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா
போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற போது  ஜான் செல்வராஜை, வங்கதேச ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இது குறித்து தமிழக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.




கருத்துரையிடுக

1 கருத்துகள்