இன்றைய இளம் தலைமுறையினரை சமூக ஊடகங்கள் கட்டிப்போட்டு உள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் ரிலீஸ், வீடியோ புகைப்படங்களை விதவிதமாக பதிவிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய அளவில் உருவாகி விட்டது.
இளம் பெண்களின் துள்ளல் ஆட்டம், பாடலுக்கு ஏற்ப நடிப்பு, இளைஞர்களின் சாகசம் உள்ளிட்ட வற்றை ரசிப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் சமூக வலைதளங்களில் தனியாக உருவாகிவிட்டனர். இதனால் ரிலீஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ரிலீஸ் வீடியோவால் நகையை பறிகொடுத்த பெண்ணின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
ரீல்ஸ்க்கு லைக்குகள் வரும் என்று நினைத்து எடுக்கப்பட்ட அந்த பெண்ணின் வீடியோ நகைபறிப்பு காரணமாக ரீல்சை விட பல மடங்கு வைரலாக பரவி விட்டது.
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் இந்திராபுரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் சுஷ்மா. இவர் சமூக வலைதளங்களில் ரிலீஸ் பதிவிடும் பழக்கம் கொண்டவர். விதவிதமான போட்டோ சூட் வீடியோக்களை எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் வித்தியாசமாக ரீல்ஸ் எடுப்பதற்காக சுஷ்மா அப் பகுதியில் உள்ள சாலையில் சுடிதார் அணிந்தபடி ஒய்யாரமாக போஸ் கொடுத்தபடி நடந்து வந்தார். இதனை அவரது தோழி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் ஒய்யாரமாக நடந்து வந்த சுஷ்மாவின் அருகில் மெதுவாக வந்தார். இதனை கண்ட சுஷ்மா ரீல்ஸ் வீடியோ எடுக்க இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து முகம் சுழித்தார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென சுஷ்மா கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை பறித்து தப்பி சென்று விட்டார்.
இந்த காட்சி ரீல்சுக்காக எடுக்கப்பட்ட வீடியோவில் முழுவதும் பதிவாகியுள்ளது.அதில் சுஷ்மா போஸ் கொடுத்தபடி மெதுவாக நடந்து வருவதும் அப்போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் நகையை பறித்து செல்வதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.சு
ஷ்மா ரீல்ஸ் மூலம் லைக்குகள் குவியும் என்று நினைத்து இருந்த நிலையில் ரீல்ஸ் சூட்டிங்கின்போது நடந்த நகைபறிப்பு மூலம் தற்போது அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.இதனை கண்டு சிலர் பரிதாபமாக நினைத்தாலும் இதுதேவைதான் என்றும் கோபத்துடன் தெரிவித்தனர்.ரீ
ல்ஸ் வீடியோவை வைத்து நகை பறித்த வாலிபரை போலீசார் ஒருபுறம் தேடி வருகிறார்கள்.
0 கருத்துகள்