பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பெரும்பாலும் கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மாநில கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 3 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று 4-வதுவேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது மொத்தம் 46 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன
இதில் தமிழகம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன தொகுதி வாரியாக போட்டியிடுபவர்கள் விவரம் வருமாறு:-
1.திருவள்ளூர்- சசிகாந்த் செந்தில்
2. கிருஷ்ணகிரி-கோபிநாத்
3.கரூர் -ஜோதிமணி
4.கடலூர் -விஷ்ணு பிரசாத்
5.சிவகங்கை-கார்த்தி சிதம்பரம்
6.விருதுநகர்-மாணிக்கம் தாகூர்
7. கன்னியாகுமரி-விஜய் வசந்த்.
0 கருத்துகள்